புதன், 17 மார்ச், 2010

நீதிமன்றத்தில் நித்தியானந்தா

நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..

ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..?? காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..

கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...

என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம், கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....

கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்



ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...
எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், வீடியோவை யூ டியூப்பில் போக்கி இருக்க வேண்டும், என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.

செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?, காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??

இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.

புதன், 10 மார்ச், 2010

கூகிள் பஸ் (Buzz) - விளைவுகள்?

கூகிள் பஸ் (Buzz) - விளைவுகள்??


இணைய உலகின் முதன்மையான பெயராக வலம் வந்து கொண்டிருக்கும் கூகிளை வியக்காதவர் எவரும் இலர் எனலாம். வெற்றிகரமான ஒரு நிறுவனமாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட கூகிள் என்ற யானைக்கு அடி பலமாக சறுக்கி இருக்கிறது.

வணிக உலகில் வெற்றி என்பது நிரந்தரமாகத் தொடர்ந்து கொண்டே இராது. மனிதன் பலவீனமானவனாகப் படைக்கப்பட்டிருப்பதன் சான்றுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆளானப் பட்ட டொயோட்டாவே சுழன்று அடிக்கும் ஆடிக்காற்றில் பறப்பதையும் கண்டு கொண்டிருக்கிறோம். அதிக விளக்கம் தேவையில்லை கூகிளின் சறுக்கலை விளக்க.

இன்றுவரை மைக்ரோசாஃப்ட், யாஹூ போன்ற ஜாம்பவான்களுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வந்த கூகிள், தற்போது லின்க்டு இன், ஃபேஸ்புக் போன்ற உறவுப்பால இணையதளங்களின் அதிரடிப் படையெடுப்பால் சற்றே மிரண்டு போயுள்ளது தெளிவாகத் தெரிகிறது. கூகிளின் தற்போதைய அறிமுகமான கூகிள் பஸ் (Buzz) உறவுப்பால அடிப்படையில் திடீரெனத் தங்கள் ஜிமெயிலில் முளைத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அது மகிழ்ச்சியான வியப்பா அல்லது கவலையால் விளைந்த அதிர்ச்சியா என்று பார்க்கும் போது, அதிகமாக இரண்டாவது வகையாகத் தான் பலருக்கு இருக்கிறது.

தன் அபிமான நடிகரோ அல்லது அரசியல் தலைவரோ ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொண்டால் சேச்சே அப்படில்லாம் இருக்காது; என் தங்கத் தலைவன் சொக்கத் தங்கமாக்கும்; எதிரிகளின் சூழ்ச்சி என்ற விளிம்புநிலை ரசிகர்கள் கூகிளுக்கும் இல்லாமல் இல்லை; அவர்கள் தான் கூகிள் பஸ் (Buzz) ஏதோ அற்புதமான வெளியீடு என சிலாகித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் கூகிள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அப்படி!

சரி என்னதான் பிரச்னை இந்த பஸ்(Buzz)ஸில்?

நீங்கள் யார் யாரிடம் எல்லாம் ஜிமெயில் அரட்டை செய்தீர்களோ அவர்கள் பெயர்கள் உங்கள் பஸ்ஸில் தோன்றிவிடும். உங்களிடம் எவரெல்லாம் அரட்டை அடித்தாரோ அவர்கள் அனைவரும் தானியங்கியாக நீங்கள் பஸ்ஸில் எழுதும் அனைத்தையும் கண்டுகொள்வர் (சுருக்கமாகப் பின் தொடர்வர்) அந்நபரைப் பின் தொடர்வோரில் உங்கள் விபரம் மறைக்கப்பட வேண்டியவரும் இருக்கலாம்.

இதில் என்ன வில்லங்கம் என்றால் உங்கள் தனிப்பட்ட விபரம் தற்போது ஊரறிந்த ரகசியம் ஆகிவிட்டது. நீங்கள் கேட்காமலே உங்கள் விபரத்தை மற்றவர் அறிந்து கொள்வர்.

சரி போகட்டும். அதனால எனக்கென்னய்யா பிரச்னை?

உலகின் மற்ற எந்த ஒரு நிறுவனத்தை விட மிக அதிகமான தனிநபர் விபரங்கள் கூகிள் கருவூலத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இத்தகவல்களை கூகிள் எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்று இதுவரை தெளிவாக கூகிள் சொல்லவில்லை; யாரும் கேட்கவும் இல்லை; மக்களுக்கு கூகிள் மீதிருக்கும் நம்பிக்கை அப்படி!

நம்மைக் கேட்காமலே பஸ் விட்டு நம் பல்ஸ் எகிற வைத்த கூகிள் இதற்குமுன் என்னவெல்லாம் செய்ததோ தெரியாது; இனி என்ன செய்யப்போகிறதோ அதுவும் தெரியாது :(

உடனடியாக நான் செய்து கொண்டது பஸ்ஸை அணைத்து வைத்தது தான்.

உங்கள் கூகிள் செட்டிங்ஸில் சென்று பஸ்ஸைச் சொடுக்கி டிஸ்ஏபிள் என்ற தெரிவு தான் நான் முதலில் செய்து கொண்டது. (கூகிள் இந்தச் சுட்டியை பஸ் வெளியிடும்போது வைக்கவில்லை என்பதும் தான் செய்த இமாலயத் தவறால் தன் பெயர் களங்கம் அடைவதைத் தடுக்கவும் இந்தச் சுட்டியை பிற்பாடு வைத்தது என்பதும் தனித் தகவல்)

யாரேனும் கேள்வி கேட்டால் கூகிளின் ஸ்டாண்டர்டு பதில் இது தான். "நம்புங்கப்பா எங்களை; நாங்க ரொம்ப நல்லவங்களாக்கும்!"

இன்னும் கொஞ்சம் உரக்கக் கேட்டவுடன் கூகிள் முதலாளி லாரி பேஜ் உதிர்த்த முத்து என்ன தெரியுமா?

"இவ்ளோ ஏன்ப்பா பயப்படுறே? அப்பன்னா நீ எதாச்சும் டகால்ட்டி வேலை பண்றியா?"

இதே போக்கு நீடித்தால் கூகிளின் நம்பிக்கை அரிதாரம் விரைவில் கலையும்!